சாலைகளில் 300 இடங்களில் வாகன சோதனை; சென்னை ஓட்டல்கள், கிளப்புகளிலும் புத்தாண்டு கொண்டாட தடை; சென்னை போலீஸ் கமி‌‌ஷனர் அறிவிப்பு

சென்னையில் ஓட்டல்களிலும், கிளப்புகளிலும் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், 300 இடங்களில் வாகன சோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் கமி‌‌ஷனர் மகே‌‌ஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் சிறுவர் பூங்காவை திறந்து போலீஸ் கமி‌‌ஷனர் பார்வையிடுவதை படத்தில் காணலாம்.
புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் சிறுவர் பூங்காவை திறந்து போலீஸ் கமி‌‌ஷனர் பார்வையிடுவதை படத்தில் காணலாம்.
Published on

சிறுவர் பூங்கா திறப்பு

சென்னை புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் ரூ.7 லட்சம் செலவில் புதிதாக சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிறுவர் பூங்காவை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை திறந்து வைத்தார். அங்கு ஒரு மரக்கன்றையும் அவர் நட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

போலீசாருக்கும், போலீசாரின் குடும்பங்களுக்கும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த நலத்திட்டங்களை செயல்படுத்த சென்னையில் 12 துணை கமிஷனர் சரகங்களிலும் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் 12 நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

புத்தாண்டு கொண்டாட்டம்

அரசு சொன்ன விதிமுறைகளின்படி கடற்கரை பகுதி, சாலைகள் மற்றும் ஓட்டல்கள், கிளப்புகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வீடுகளில்தான் புத்தாண்டு கொண்டாட வேண்டும். எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

ஓட்டல்கள், கிளப்புகளில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து புத்தாண்டு கொண்டாடலாம். ஆனால் டிக்கெட் வசூலித்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஓட்டல் மற்றும் கிளப்புகளில் அனுமதி இல்லை. சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தடுக்க சாலைகளில் 300 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து, வாகன சோதனை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com