மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல்காவடி புறப்பட்டது

வைகாசி விசாக திருவிழாவையொட்டி மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல்காவடி புறப்பட்டு சென்றது.
மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் வேல்காவடி புறப்பட்டது
Published on

மணவாளக்குறிச்சி,

வைகாசி விசாக திருவிழாவையொட்டி மணவாளக்குறிச்சி சந்திப்பில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பறக்கும் வேல்காவடி செல்லும் விழா கடந்த 18-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. விழாவின் முதல்நாள் காலை கணபதிஹோமம், மாலை திருவிளக்கு பூஜை, தீபாராதனை, நலத்திட்ட உதவி வழங்குதல், அன்னதானம் ஆகியவை நடந்தது. 19-ந்தேதி காலை தீபாராதனை, மாலை நையாண்டிமேளம், வேல்தரித்தல், இரவு 8 மணிக்கு பூக்குழி இறங்குதல், அன்னதானம், காவடி பெரும் பூஜை ஆகியவை நடைபெற்றது.

திருச்செந்தூருக்கு புறப்பட்டது

நேற்று காலை 7.30 மணிக்கு யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு ஊர்வலமாக சென்று அங்கு தீபாராதனை காட்டப்பட்டு மீண்டும் பிள்ளையார் கோவில் வந்தடைந்தது. பின்னர் மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு நாசிடோல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, 4 மணிக்கு பறக்கும் வேல்காவடி பிள்ளையார் கோவிலில் இருந்து அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூருக்கு புறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com