வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 27 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் டி.ஐ.ஜி. வனிதா உத்தரவு

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 27 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர் பதவி உயர்வுடன் மாற்றப்பட்டுள்ளார்கள்.
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 27 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் டி.ஐ.ஜி. வனிதா உத்தரவு
Published on

வேலூர்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்த பிரபாவதி கலசபாக்கத்திற்கும், சுபா பெரணமல்லூருக்கும், ராஜலட்சுமி செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், வேலூர் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மைதிலி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோன்று வசந்தி அரக்கோணம் மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், சோனியா திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், அபர்ணா வேலூர் மாவட்ட பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு பிரிவுக்கும் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வுடன் மாற்றப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த மலர், ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிந்த நிர்மலா கலவைக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரிந்த பி.அமுதா போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், கிருஷ்ணகிரியில் பணிபுரிந்த ஆர்.அமுதா திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்த பி.அமுதா அங்கிருந்து அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும் பதவி உயர்வுடன் மாற்றப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜனார்த்தனன் செய்யாறுக்கும், அரக்கோணம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சியாமளா, திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவுக்கும், அங்கு பணிபுரிந்த ரேகாமதி வேலூருக்கும் மாற்றப்பட்டுள்ளார்கள். கலவை கோவிந்தசாமி பள்ளிகொண்டாவுக்கும், திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளார்கள்.

போளூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ராணி வேட்டவலத்திற்கும், அங்கு பணிபுரிந்த மனோன்மணி லத்தேரிக்கும், சென்னை கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த இலக்குவன் பொன்னைக்கும், அங்கு பணிபுரிந்த பார்த்தசாரதி வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும், ஆற்காடு டவுன் ஆனந்தன் ராணிப்பேட்டைக்கும், சத்துவாச்சாரி புகழேந்தி ஆற்காடு டவுனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அரக்கோணம் அண்ணாதுரை சத்துவாச்சாரிக்கும், ஆரணி தாலுகா சாலமோன்ராஜ் கண்ணமங்கலத்திற்கும், குடியாத்தம் மதுவிலக்குபிரிவு பாரதி ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்திற்கும், கலசபாக்கம் ராஜகோபால் குடியாத்தம் மதுவிலக்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com