வேலூர் கலெக்டர் அலுவலகம்: புதிய எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில், புதிய எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு, அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.
வேலூர் கலெக்டர் அலுவலகம்: புதிய எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு
Published on

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் பார்வையிட்டார்.

2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் வி.வி.பேட் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த எந்திரங்களின் முதல்கட்ட சரிபார்ப்பு பணி நடைபெற்றது. சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மொத்தமுள்ள 4,730 எந்திரங்களில் 237 எந்திரங்கள் மாதிரி வாக்குப்பதிவுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 47 எந்திரங்களில் தலா 1200 வாக்குகளும், 95 எந்திரங்களில் தலா 1000 வாக்குகளும், 95 எந்திரங்களில் தலா 500 வாக்குகளும் பதிவு செய்யப்படுகிறது. இந்த மாதிரி வாக்குப்பதிவு இன்றும் (வியாழக்கிழமை) நடக்கிறது.

இந்த மாதிரி வாக்குப்பதிவானது தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை வி.வி.பேட் எந்திரம் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தினகரன், கலெக்டர் அலுவலக மேலாளர் முரளி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com