வேலூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த பரிசோதனை மூலம் சிகிச்சை

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த பரிசோதனை மூலம் சிகிச்சை அளிப்பது குறித்து டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கான 10 நாள் பயிற்சி நேற்று தொடங்கியது.
வேலூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த பரிசோதனை மூலம் சிகிச்சை
Published on

அடுக்கம்பாறை,

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த பரிசோதனை மூலம் இலவசமாக தைராய்டு பிரச்சினையை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கான 10 நாள் பயிற்சி நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி குழந்தைகள் நலத்துறை தலைவர் தேரணிராஜன் தலைமை தாங்கினார். இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் கலந்துகொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக அரசு மருத்துவக்கல்லூரி டீன் சாந்திமலர் கலந்துகொண்டு, பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது-

பிறந்த குழந்தைகளுக்கு தைராய்டு பிரச்சினை காரணமாக மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, குழந்தை பிறந்த 78 மணி நேரத்தில், பாதத்தில் இருந்து 4 சொட்டு ரத்தம் எடுத்து, பில்டர் பேப்பரில் வைத்து ரத்த பரிசோதனை மூலம் நோய் கண்டறியப்படுகிறது.

குழந்தை பிறந்த உடனே பிரச்சினைகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதால் நோயை எளிமையாக குணப்படுத்த முடியும். மேலும் உயிரிழப்புகளையும் தடுக்க முடியும். சேமிக்கப்படும் ரத்த மாதிரிகள் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். வரும் ஏப்ரல் மாதம் முதல் 2019-ம் ஆண்டு மார்ச் வரை என ஒரு வருடம் இந்த ஆய்வு மேற்கொள்ளபடும்.

ரத்த மாதிரிகளை 48 மணி நேரத்தில் பரிசோதனை செய்து முடிவுகள் இ-மெயில் மூலமாக அந்தந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த ரத்த மாதிரி எடுக்க ஒரு குழந்தைக்கு ரூ.70 என குறைந்தபட்ச செலவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொகையையும் அரசே வழங்குகிறது. தமிழகத்தில் முதல்கட்டமாக வேலூர் மாவட்டத்தில் தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசு, தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இலவசமாக ரத்த பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் வேலூர் மாவட்டத்தில் இருந்து தினமும் 100 பேர் கலந்துகொண்டு, பயிற்சி பெறுவார்கள். 10 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சியில் ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com