வேலூர் தனியார் மருத்துவமனையில் 3 பெண்கள் உள்பட 6 பேர் கொரோனாவுக்கு பலி

வேலூர் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பெண்கள் உள்பட 6 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
வேலூர் தனியார் மருத்துவமனையில் 3 பெண்கள் உள்பட 6 பேர் கொரோனாவுக்கு பலி
Published on

வேலூர்,

வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா உள்பட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பெண்கள் உள்பட 6 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர். அவர்கள் விவரம் வருமாறு:-

வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவருடைய மனைவி ஜோதி (வயது 68). இவர் கடந்த 5-ந்தேதி கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

அதேபோன்று பாகாயம் கமலாட்சிபுரத்தை சேர்ந்த சூமரவேலுவின் மனைவி ரேணுகா (69), விருப்பாட்சிபுரத்தை சேர்ந்த ஜோதி என்பவருடைய மனைவி நீலஜோதி ஆகியோரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அணைக்கட்டு மேல்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த கண்ணா (84) கடந்த 12-ந் தேதியும், குடியாத்தம் குசலைபேட்டையை சேர்ந்த ஷபீர் (69) கடந்த மாதம் 25-ந்தேதியும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூர் பகுதியை சேர்ந்த ரத்தினம் (72) கடந்த 4-ந்தேதியும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்.

இதுகுறித்து வேலூர், சித்தூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இறந்தவர்களின் உடல்கள், அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com