‘ஆன்லைன்’ வழியாக வருமான வரி கணக்கை பாதுகாப்பாக தாக்கல் செய்வது எப்படி? டி.ஜி.பி. அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம்

வருமான வரி கணக்கை பாதுகாப்பாக தாக்கல் செய்வது எப்படி? குறித்து டி.ஜி.பி. அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
‘ஆன்லைன்’ வழியாக வருமான வரி கணக்கை பாதுகாப்பாக தாக்கல் செய்வது எப்படி? டி.ஜி.பி. அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம்
Published on

சென்னை,

வருமான வரி செலுத்துபவர்கள் தங்கள் வருமான வரி கணக்குகளை ஆன்-லைன் மூலம் வருகிற 31-ந் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும். தவறும்பட்சத்தில் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்தவேண்டும் என்று வருமான வரித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் வருமான வரி கணக்குகளை ஆன்-லைன் வழியாக பாதுகாப்பாக தாக்கல் செய்வது எப்படி? என்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உத்தரவின்பேரில் சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் வருமான வரி தாக்கல் செய்வதின் முக்கியத்துவம் மற்றும் வருகிற 31-ந் தேதிக்குள் இணையதளம் மூலமாக மட்டுமே தாக்கல் செய்வதின் அவசியத்தையும் வருமான வரி முதன்மை ஆணையர் சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன் விளக்கி கூறினார். வருமான வரி சம்பந்தமான பல்வேறு அம்சங்களை வருமான வரி கூடுதல் ஆணையர் அமோல் பிகிர்தனே காணொலி காட்சி மூலம் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சி நிறைவில் கூடுதல் டி.ஜி.பி. சுனில்குமார் வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். முன்னதாக கூடுதல் டி.ஜி.பி. சேஷசாயி வரவேற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com