கள்ளச்சாராயம் விற்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்: திருக்கனூர் பகுதியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளத்தில் பரவிய வீடியோவை தொடர்ந்து திருக்கனூர் பகுதியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் ஆய்வு செய்தார்.
கள்ளச்சாராயம் விற்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்: திருக்கனூர் பகுதியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
Published on

சாராய கடைகள் மூடல்

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், அதனை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர்த்து பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கள், சாராயம், மதுக்கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன.இந்த நிலையில் திருக்கனூர் அருகே உள்ள மணலிப்பட்டு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாகவும், சமூக இடைவெளியின்றி பலர் குடிப்பதற்காக குவிந்திருப்பதாகவும் சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்று வைரலானது.

சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

இது குறித்து சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர். அதன்பேரில் புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் திருக்கனூர், கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, சோம்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள சாராயக்கடைகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா? என நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது யாரும் சிக்கவில்லை.இந்த ஆய்வின்போது மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், திருக்கனூர் சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

கலால் துறை விசாரணை

கலால் துறையினரும் சாராயம் விற்பனை குறித்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து திருக்கனூர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com