வாக்காளர் பட்டியலில் அனைத்து வாக்காளர்களையும் விடுபடாமல் சேர்க்க வேண்டும் பார்வையாளர் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் அனைத்து வாக்காளர்களையும் விடுபடாமல் சேர்க்க வேண்டும் என வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான் கூறினார்.
வாக்காளர் பட்டியலில் அனைத்து வாக்காளர்களையும் விடுபடாமல் சேர்க்க வேண்டும் பார்வையாளர் தகவல்
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் சரிபார்ப்பு திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான் தலைமை தாங்கினார். அப்போது வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், விடுபட்டவர்களை சேர்த்தல் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழிப்புணர்வு

அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் வகையில் விடுபடாமல் சேர்க்க வேண்டும். இறந்த, இடம் பெயர்ந்த வாக்காளர்களை தகுந்த விசாரணை அடிப்படையில் நீக்க வேண்டும். அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். தேசிய வாக்காளர் தினம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ந் தேதி வருவதையொட்டி சிறப்பான விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூஸ்ஷணகுமார், உதவி கலெக்டர் ஜெயப்பிரீதா, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு) ஜெயதீபன் மற்றும் அனைத்து தாசில்தார்கள், நகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com