ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடும் மக்களுடன் விஜய் ரசிகர்கள் சந்திப்பு போராட்டத்திற்கு ஆதரவு

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடும் மக்களை விஜய் ரசிகர்கள் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடும் மக்களுடன் விஜய் ரசிகர்கள் சந்திப்பு போராட்டத்திற்கு ஆதரவு
Published on

திருவாலங்காடு,

தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. ஆய்வால் நிலத்தடி நீர் மற்றும் மண்வளம் பாதிக்கப்படுகிறது என கூறி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அய்யனார் கோவில் திடலில் 131-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டம் நடைபெற்ற கதிராமங்கலம் அய்யனார் கோவில் திடலுக்கு தஞ்சை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அங்கு ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடும் மக்களை சந்தித்து பேசினர்.

விஜய் ரசிகர்கள் ஆதரவு

அப்போது மீத்தேன் திட்ட எதிர்ப்பு குறித்து நடிகர் விஜய் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். அதற்காக தான் ஓ.என்.ஜி.சி. மற்றும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராடும் உங்களை நாங்கள் சந்திக்க வந்தோம் என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் ஓ.என்.ஜி.சி. ஆய்வால் கதிராமங்கலத்தில் மண் வளம், நிலத்தடிநீர் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் விளக்கினார். போராட்டத்திற்கு ஆதரவு தருவதோடு தொடர்ந்து மக்களுடன் இணைந்து போராட வாருங்கள் என்றும் அவர்களிடம் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com