

திருப்பூர்
அவினாசி தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கிராம நிர்வாக அதிகாரிகள் கூறும்போது அவினாசி தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக செயல்படுகிறார். எனவே அவரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றனர்.