ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு கிராம மக்கள் மனு

பெரிய கலையம்புத்தூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு கிராம மக்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு கிராம மக்கள் மனு
Published on

திண்டுக்கல்:

பழனி அருகே உள்ள பெரியகலையம்புத்தூரை சேர்ந்த மக்கள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், பெரிய கலையம்புத்தூரில் உள்ள ஐகோர்ட்டு பத்ரகாளியம்மன் கோவில் சார்பில், கோட்டை மைதானத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு 9.2.2022 அன்று பெரிய கலையம்புத்தூர் கோட்டை மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. இதில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே ஜல்லிக்கட்டு விழாவுக்கு அனுமதி, பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com