

பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரி சுவாமிநாத விநாயகர் கோவில் வருடாபிஷேக விழாவையொட்டி மேலைச்சிவபுரி மற்றும் வேகுப்பட்டியில் கிராம மக்கள் சார்பில் நேற்று மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அக்காளைகளை இளைஞர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பெரும்பாலான காளைகள் இளைஞர்களிடம் பிடிபடாமல் துள்ளி குதித்து ஓடின.
மஞ்சு விரட்டினை சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீசார் செய்திருந்தனர்.