கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 180 பேர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 180 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 180 பேர் கைது
Published on

விழுப்புரம்,

சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் தீபாவளியன்று நாடுமுழு வதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட் டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, தீபாவளி யன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் எனவும், மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாகவும் தீர்ப் பளித்தார்.

இந்த காலநேரத்தை தளர்த்தக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் கால நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று கூறினார். அதன்படி தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்தி ருந்தது.

கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என காவல் துறையினர் எச்சரித்திருந்தனர். மேலும் இதனை கண்காணிக்க தனிப்படையும் அமைக்கப் பட்டது.

இதனிடையே விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளியன்று கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 180 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

விழுப்புரம் உட்கோட் டத்தில் வளவனூர், விழுப்புரம் நகரம், மேற்கு, தாலுகா போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 67 பேரும், திண்டிவனம் உட் கோட்டத்தில் திண்டிவனம், மயிலம், ரோஷணை ஒலக்கூர், பிரம்மதேசம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 25 பேரும், செஞ்சி காவல் உட்கோட்டத் தில் 11 பேரும், திருக்கோவிலூர் காவல் உட்கோட்டத்தில் 23 பேரும், கோட்டக்குப்பம் காவல் உட்கோட்டத்தில் 22 பேரும், கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்தில் 15 பேரும், உளுந்தூர்பேட்டை காவல் உட்கோட்டத்தில் 17 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com