

கல்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஊரடங்கு உத்தரவை மீறி உரிய காரணம் இல்லாமலும், முக கவசம் அணியாமலும் சிலர் நேற்று இருசக்கர வாகனங்களில் சுற்றிக்கொண்டிருந்தனர். அப்படி சுற்றிக்கொண்டிருந்த 6 நபர்களை பிடித்து விசாரணை செய்த கல்பாக்கம் போலீசார் அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.
இதேபோல சதுரங்கப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில் போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் மீது ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றியதாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் ஓட்டிவந்த 5 வாகனங்களையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.