

அன்னவாசல்,
விராலிமலை தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் நேற்று அன்னவாசல் வடக்கு ஒன்றியம் உடையாம்பட்டி, வாதிரிப்பட்டி, ராப்பூசல்மந்தை, கலிங்கிப்பட்டி, பட்டையார்களம், மலம்பட்டி, கீழக்குறிச்சி, சித்துப்பட்டி, விளத்துப்பட்டி, ஊரப்பட்டி, மெய்வழிச்சாலை, எல்லைப்பட்டி, சொக்கநாதன்பட்டி, மதியநல்லூர், பணம்பட்டி, காதிரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வாக்குகள் சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது:-
இன்று நான் உங்களிடம் பணிவுடன் வாக்கு கேட்கிறேன். பதவிக்கு வந்தாலும் இதே பணிவுடன் உங்களிடம் நடந்து கொள்வேன். அது என் விருப்பமும், ஆசையும் ஆகும். எனக்கு நீங்கள் வாக்களிப்பது மூலம் நான் உங்களுக்கு நன்றியுடையவனாக இருப்பேன். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அன்னவாசல் ஒன்றியப்பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி, மின்வசதி போன்ற அடிப்படை தேவைகள் உடனே நிறைவேற்றப்படும்.
என்னிடம் கோரிக்கை மனுவுடன் உதவி கேட்டு வரும் தொகுதி மக்களுக்கு பாகுபாடின்றி உதவி செய்வேன். நான் செய்யும் எந்த உதவிக்கும் லஞ்சம் பெற மாட்டேன் என சத்தியம் செய்கிறேன். எனவே எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பிரசாரத்தின் போது, அன்னவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.