சலவை தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் நத்தம் விசுவநாதன் வழங்கினார்

சலவை தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் நத்தம் விசுவநாதன் வழங்கினார்.
சலவை தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் நத்தம் விசுவநாதன் வழங்கினார்
Published on

நத்தம்,

அ.தி.மு.க. சார்பில் சலவை தொழிலாளர்கள் 325 பேருக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, நத்தம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமை தாங்கி, சலவை தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் ஜெயபாலன், தொழில் அதிபர் அமர்நாத், ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சேக்ஒலி, ஊராட்சிமன்ற தலைவர்கள் கண்ணன் (வேலம்பட்டி), சவரிமுத்து (செந்துரை), தேன்மொழி முருகன் (பிள்ளையார்நத்தம்), ஊராட்சி செயலர் சின்னு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அழகாஸ்திரி கவுண்டர், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் கணேசன், நகர செயலாளர் நாகரத்தினம், துணைத்தலைவர் அழகர்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சார்லஸ், செல்வராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வமணி, முத்து, அ.தி.மு.க. நிர்வாகிகள் செல்லப்பாண்டி, ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் நத்தம் தொகுதி அளவில் 900 சலவை தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விரைவில் வழங்கப்படும் என்று நத்தம் விசுவநாதன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com