கொப்பல், மைசூருவில் தொழிற்பயிற்சி பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும்

கொப்பல், மைசூருவில் தொழிற்பயிற்சி பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும் மந்திரி பசவராஜ் ராயரெட்டி தகவல்
கொப்பல், மைசூருவில் தொழிற்பயிற்சி பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும்
Published on

பெங்களூரு,

கொப்பல், மைசூருவில் தொழிற்பயிற்சி பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும் என்று மந்திரி பசவராஜ் ராயரெட்டி கூறினார்.

பெங்களூருவில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை மந்திரி பசவராஜ் ராயரெட்டி பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் என்ஜினீயரிங் படித்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பது இல்லை. இதுபற்றி அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு பல்வேறு தொழில் முதலீடுகளுக்கு அனுமதி கொடுக்கிறது. கர்நாடக தொழிற்பயிற்சி பல்கலைக்கழகங்களை திறக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொப்பல், மைசூருவில் இந்த தொழிற்பயிற்சி பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும். அடுத்து வரும் நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய தொழிற்பயிற்சி பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும். கர்நாடகத்தில் 214 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஆண்டுக்கு 1 லட்சம் மாணவ-மாணவிகள் படிப்பை முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள்.

இவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காததால், அந்த படிப்பை படிப்பதிலும் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால் சில பகுதிகளில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன. பெங்களூரு பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பசவராஜ் ராயரெட்டி பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com