நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்-கலெக்டர் வெளியிட்டார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை கலெக்டர் சங்கர்லால் குமாவத் வெளியிட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்-கலெக்டர் வெளியிட்டார்
Published on

ராமநாதபுரம்,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை கலெக்டர் சங்கர்லால் குமாவத் வெளியிட்டார்.

வாக்காளர் பட்டியல் வெளியீடு

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் சங்கர்லால் குமாவத் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.அப்போது அவர் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகளில் 111 வார்டு உறுப்பினர் மற்றும் 7 பேரூராட்சிகளில் 108 வார்டு உறுப்பினர் பதவி இடங்கள் உள்ளன. தேர்தலுக்காக 342 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பார்க்கலாம்

மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 நகராட்சிகளில் தற்போது 1 லட்சத்து ஆயிரத்து 431 ஆண் வாக்காளர்கள், 1, லட்சத்து 4 ஆயிரத்து 319 பெண் வாக்காளர்கள் மற்றும் 26 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 776 வாக்காளர்கள் உள்ளனர். அதைப்போல 7 பேரூராட்சிகளில் 38 ஆயிரத்து 474 ஆண் வாக்காளர்கள், 39 ஆயிரத்து 390 பெண் வாக்காளர்கள் மற்றும் ஒரு மூன்றாம் பாலின வாக்காளர் என மொத்தம் 77 ஆயிரத்து 865 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.அதன்படி தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 905 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 43 ஆயிரத்து 709 பெண் வாக்காளர்கள் 27 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 83 ஆயிரத்து 641 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் விவரம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் ஆகியவை அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துசாமி, மாவட்ட ஊராட்சி செயலர் ரகு வீர கணபதி உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
-------



Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com