பாம்பாறு அணையில் இருந்து வீணாக வெளியேற்றப்படும் தண்ணீர்

ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணையில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.
பாம்பாறு அணையில் இருந்து வீணாக வெளியேற்றப்படும் தண்ணீர்
Published on

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள பாம்பாறு அணையின் முழு கொள்ளளவு எட்டியதையொட்டி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக கடந்த 28.11.2017 முதல் 90 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்துக்காக 90 நாட்களுக்கு வினாடிக்கு 50 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதன் மூலம் ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள மிட்டப்பள்ளி, மூன்றாம்பட்டி, கொட்டுகாரம்பட்டி, புளியம்பட்டி, எட்டிபட்டி, பாவக்கல், நல்லவம்பட்டி, நடுப்பட்டி, குப்பநத்தம் உள்ளிட்ட 12 கிராமங்கள் 2,501 ஏக்கரும், தர்மபுரி மாவட்டம் அருர் வட்டத்தில் உள்ள தா.அம்மாபேட்டை, வேடக்கட்டமடுவு, மேல்செங்கம்பாடி உள்ளிட்ட 3 கிராமங்கள் மூலம் 1,499 ஏக்கரும் என மொத்தம் 15 கிராமங்களில் மொத்தம் 4000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது.

தற்போது இந்த பகுதிகளில் நெல் அறுவடை 75 சதவிதம் முடிவுற்ற நிலையில். பாசன கால்வாய் வழியாக 90 நாட்கள் முடிந்தும் தொடர்ந்து 120 நாட்களுக்கும் மேலாக நீரை வெளியேற்றப்படுகிறது. இதனால் பாம்பாறு அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் கலந்து வீணாகிறது.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பின் உதவி பொறியாளர் ஜெயக்குமார் கூறுகையில், அரசு ஆணையின்படி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கையின் பேரில் உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் தண்ணீர் திறந்துள்ளதாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com