பெரியார் சிலையை உடைப்போம் என்று கூறிய எச்.ராஜா உருவபொம்மை எரிப்பு

எச்.ராஜா அண்மையில் சாதி வெறியை தூண்டும் பெரியார் சிலையை உடைப்போம் என்று கூறியுள்ளார். இதனை கண்டித்து செந்துறை அம்பேத்கர் சிலை முன்பு தி.க., தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியார் சிலையை உடைப்போம் என்று கூறிய எச்.ராஜா உருவபொம்மை எரிப்பு
Published on

செந்துறை,

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா அண்மையில் சாதி வெறியை தூண்டும் பெரியார் சிலையை உடைப்போம் என்று கூறியுள்ளார். இதனை கண்டித்து செந்துறை அம்பேத்கர் சிலை முன்பு தி.க., தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திராவிடர் கழக மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில கொள்கைபரப்பு துணை செயலாளர் பெருநர்கிள்ளி, ஒன்றிய செயலாளர்கள் ஞானமூர்த்தி, செல்வராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் கருப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென சிலர் ராஜாவின் உருவ பொம்மையை கொண்டுவந்து எரித்தனர். இதை யடுத்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் உருவ பொம்மையை பிடுங்கி தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் ஆண்டிமடத்தில் திராவிடர் கழகம் சார்பில், பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பெரியார் சிலையை உடைப்போம் என்று பேசியதை கண்டித்து அவரை கைது செய்ய வலியுறுத்தினர். பின்னர் அவரது உருவப் படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் சிந்தனைசெல்வன் உள்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com