பிரசாரம் செய்யும்போது முகக் கவசம் அணிய வேண்டும் அரசியல் கட்சியினருக்கு கலெக்டர் அறிவுரை

பிரசாரம் செய்யும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று கோவையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சியினருக்கு கலெக்டர் ராஜாமணி பேசினார்.
பிரசாரம் செய்யும்போது முகக் கவசம் அணிய வேண்டும் அரசியல் கட்சியினருக்கு கலெக்டர் அறிவுரை
Published on

பிரசாரம் செய்யும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று கோவையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சியினருக்கு கலெக்டர் ராஜாமணி பேசினார்.

அனைத்துக் கட்சி கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ராஜாமணி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரைமுருகன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சிவக்குமார், அனைத்துக்கட்சி பிரமுகர்கள், சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முகக்கவசம் அணிய வேண்டும்

கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜாமணி பேசியதாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது. 20-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 13, 14 -ந் தேதி பொது விடுமுறை நாட்கள் என்பதால் வேட்பு மனுக்கள் வாங்கப்பட மாட்டாது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சம்மந்தப் பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனுக்கள் வழங்கலாம்.

வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யும் போது 5 நபர்கள் மட்டும் செல்ல வேண்டும். பொது இடங்களில் பிரசாரம் செய்யும் போது அனைவரும் முக்கவசம் அணிய வேண்டும். பொது கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் சமூக இடைவெளி மற்றும் தெர்மல் ஸ்கிரீனிங் செய்ய வேண்டும்.

கட்டணமில்லா தொலைபேசி

வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் 2 நபர்கள் மற்றும் தேர்தல் அலுவலகத்தின் 100 மீட்டர் தூரத்திற்குள் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடைமுறை களில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் வேட்பாளர்கள் அவர்களது முகவர்கள் தேர்தல் அலுவலரிடம் புகார் செய்யலாம்.

நன்னடத்தை மற்றும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து 24 மணிநேர கட்டண மில்லா தொலை பேசி சேவை எண் 1800 425 4757-ல் புகார் தெரிவிக்கலாம். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிக்கும் குழுக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

எனவே, அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள் என அனைவரும் தேர்தல் நடத்தை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com