வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறோம் - பெஸ்ட் ராமசாமி

வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம் என்று பெஸ்ட் ராமசாமி கூறினார்.
வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறோம் - பெஸ்ட் ராமசாமி
Published on

கோவை,

வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம் என்று கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறினார்.

கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி கோவையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை வரவேற் கிறோம். இந்த சட்டப்பிரிவு 90 சதவீதம் தவறாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் மூலம் எந்த விசாரணையும் இல்லாமல் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. பொய் வழக்குகளால் அதிகம்பேர் பாதிக்கப்படுகிறார்கள். கோவை மாவட்டத்தில் ஆண்டுக்கு 150 வழக்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் முன்பு போடப்பட்டது.

எங்களது கட்சியின் போராட்டம் காரணமாக இந்த எண்ணிக்கை குறைந்தது. இந்த சட்டப்பிரிவில் உடனடி கைது கூடாது. ஜாமீன் உடனடியாக தர வேண்டும் என்று தற்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. எங்களை பொறுத்த அளவில் வன்கொடுமையில் உண்மையிலேயே பாதிக்கப்பட்டு இருந்தால் நடவடிக்கை எடுப்பதை நாங்கள் தவறு என்று கூறமாட்டோம். ஆனால் இந்த சட்டப் பிரிவை தவறாக பயன்படுத்துவதைத்தான் எதிர்க்கிறோம். தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது கண்டனத்துக்குரியது. அதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத்தருவதில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சினிமா நடிகர்கள் மார்க்கெட் போன பிறகு அரசியலுக்கு வருவதை எதிர்க்கிறோம். கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி பிரச்சினையில் கவர்னரின் விசாரணை சட்டத்திற்குட்பட்டு இருந்தபோதும் இதுபோன்ற பிரச்சினைகளில் கவர்னரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தவறான முன்னுதாரணமாக இருக்கும்.

அத்திக்கடவு-அவினாசி திட் டத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து தொடங்கி வைக்க வேண்டும். கோவை கருமத்தம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனம் ஒருமுறை செல்ல ரூ.85 வசூலிக்கிறார்கள். இதனால் அப்பகுதி வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி வசூலை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லா விட்டால் முற்றுகை போராட்டம் நடத்துவோம். வருகிற தேர்தலில் மக் கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநில பொருளாளர் நேருநகர் நந்து, மாநகர செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் கற்பகவள்ளி, மாநகர் மாவட்ட தலைவர் கண்ணன், மேற்கு மாவட்ட தலைவர் லோகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com