காஞ்சீபுரம் அருகே தொழுநோயால் உடல் ஊனமுற்றோருக்கு நலத்திட்ட உதவிகள்

காஞ்சீபுரம் அருகே தொழுநோயால் உடல் ஊனமுற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
காஞ்சீபுரம் அருகே தொழுநோயால் உடல் ஊனமுற்றோருக்கு நலத்திட்ட உதவிகள்
Published on

காஞ்சீபுரம்,

75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காஞ்சீபுரம் அடுத்த திருப்புட்குழி சமுதாய சுகாதார மையத்தில் தொழுநோய் விழிப்புணர்வு, ஊன தடுப்பு முகாம் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு உடல் ஊனங்கள் ஏற்பட்ட நபர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி கலந்து கொண்டு தொழுநோயால் உடல் ஊனம் அடைந்த நபர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட தொழுநோயால் பாதிக்கப்பட்டு உடல் ஊனம் ஏற்பட்ட நபர்கள் பங்கேற்று பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி பேசும்போது, தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழ்நாட்டை தொழுநோய் இல்லாத மாநிலமாக அமைய வைப்பதே இத்திட்டத்தின் இலட்சியமாகும்.

தொழுநோயிற்கு தற்போது மாத்திரை, மருந்துகள் மற்றும் உபகரணங்கள் கண்டறியப்பட்டதால் இந்நோய்க்கு சிகிச்சை எளிமையாக மேற்கொள்ள முடிகிறது என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (தொழுநோய்) கனிமொழி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் பழனி, வட்டார மருத்துவ அலுவலர் (சமுதாய சுகாதார நிலையம்) அருள்மொழி, மருத்துவர்கள், நலக்கல்வியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com