ரூ.28 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்

நீலகிரியில் 13 பேருக்கு ரூ.28 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
ரூ.28 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் வங்கியாளர் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசினார்.

இதையடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தாட்கோ மூலம் குன்னூர் கரன்சி பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு ரூ.8.04 லட்சத்தில் (ரூ.2.25 லட்சம் மானியத்துடன்) சரக்கு வாகனம், சுய தொழில் தொடங்க 4 பேருக்கு ரூ.11.02 லட்சம் (ரூ.3.30 லட்சம் மானியத்துடன்) கடனுதவி, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 5 பேருக்கு ரூ.2.5 லட்சம் செலவில் விவசாய கடன் அட்டைகள், 2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் கடனுதவி என மொத்தம் 13 பேருக்கு ரூ.28.03 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சிறுபான்மையினர் உரிமை தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு சுய தொழில் செய்ய கடனுதவிகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு, தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன், கால்நடை பராமரிப்பு துறை அதிகாரி பகவத்சிங், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி கவுசல்யா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com