தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது தொழிலாளியின் இடுப்பு பகுதியில் முறிந்த ‘ஊசி’

தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது தொழிலாளிக்கு செலுத்தப்பட்ட ஊசி இடுப்பு பகுதியில் முறிந்தது. இது ஸ்கேன் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது தொழிலாளியின் இடுப்பு பகுதியில் முறிந்த ‘ஊசி’
Published on

கோவை,

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகன் தம்பிதுரை (வயது 26), தொழிலாளி.இவருக்கு கடந்த மாதம் 22-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக அவர் அந்த பகுதியில் உள்ள மீனாட்சி ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த போது டைபாய்டு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு காய்ச்சலை கட்டுப்படுத்த இடது பக்கஇடுப்பு பகுதியில் மருந்து ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 26-ந்தேதி அவருக்கு ஊசி செலுத்தப்பட்ட இடுப்பு மற்றும் காலில் லேசான வலி ஏற்பட்டு உள்ளது.

அந்த வலியானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனால் பயந்துபோன அவர் உடனே தான் ஏற்கனவே காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்ற தனியார்ஆஸ்பத்திரிக்கு சென்று இடுப்பு மற்றும் காலில் ஏற்பட்டவலி குறித்து தெரிவித்துள்ளார். ஆனால் அங்குள்ள டாக்டர்கள் அதற்கு சரியானபதில் அளிக்கவில்லை என்றுகூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 21-ந்தேதி தம்பிதுரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சரியாக தெரியாததால் வெளியே சென்று ஸ்கேன் பரிசோதனை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.பின்னா கோவையில் உள்ள ஒரு பரிசோதனை மையத்தில் ஸ்கேன் செய்தார். அந்த ஸ்கேன் பா சோதனை அறிக்கையில் அவருடைய இடுப்பின் இடது பக்கத்தில் சிறிய அளவிலான ஊசி முறிந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம்கு றித்து கோவைஅரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-தம்பிதுரைக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவருடைய இடது இடுப்பு பகுதியில் ஊசி மூலம் மருந்து செலுத்திவிட்டு ஊசியை வெளியே எடுக்கும் போது அதில் உள்ள ஊசியின் முனையானது சுமார் 7மி.மீட்டர் அளவில் முறிந்து இடுப்பு பகுதியின் உள்ளே சிக்கி இருப்பது தெரியவந்தது. இதை அகற்ற முடிவுசெய்யப்பட்டது.

இந்தநிலையில்இந்த சம்பவம்குறித்து தகவல் அறிந்த மீனாட்சி ஆஸ்பத்திரி நிர்வாகம் தம்பிதுரைக்கு சிகிச்சை அளித்து இடுப்பு பகுதியில் சிக்கி உள்ள ஊசியை எடுக்க முன்வந்தனர்.இதுதொடர்பாகஅரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு தகவல்தொவிக்கப்பட்டது. அதற்கு அவர்கள் அனுமதி அளித்ததை தொடர்ந்து தம்பிதுரை நேற்று மாலை மீனாட்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற தொழிலாளியின் இடுப்பு பகுதியில் செலுத்தப்பட்ட ஊசியானது முறிந்து உள்ளே சிக்கி இருந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com