தி.மு.க.வின் ஊழல் குறித்து கமல்ஹாசன் பேச மறுப்பது ஏன்? அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

தி.மு.க.வின் ஊழல் குறித்து கமல்ஹாசன் பேச மறுப்பது ஏன்? என்று அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க.வின் ஊழல் குறித்து கமல்ஹாசன் பேச மறுப்பது ஏன்? அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பாரேரி கிராம மக்கள் 54 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி சிங்கபெருமாள் கோவில் தேரடி அருகே நடைபெற்றது. இதற்கு காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கவுஸ்பாஷா தலைமை தாங்கினார்.

ஒன்றிய அவைத்தலைவர் சந்தானகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் பலராமன், ஒன்றிய துணை செயலாளர் வடகால் மாரி முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரி சரவணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் பாண்டியராஜன், தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர்:-

நாங்கள் தேர்தல் கூட்டணி குறித்து யாரிடமும் இன்னும் பேசவில்லை. பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவோம். அதிகம் ஊழல் புரிந்த கட்சியான தி.மு.க. குறித்து கமல்ஹாசன் பேசுவதில்லையே?

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட துணை செயலாளர் சீனுவாசன், முன்னாள் நகரமன்ற தலைவர் கோபிகண்ணன், திம்மாவரம் நீலமேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com