கடைகள் அடைப்பு உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மாநகராட்சி கமிஷனருக்கு விக்கிரமராஜா வேண்டுகோள்

கடைகள் அடைப்பு உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மாநகராட்சி கமிஷனருக்கு விக்கிரமராஜா வேண்டுகோள்.
கடைகள் அடைப்பு உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மாநகராட்சி கமிஷனருக்கு விக்கிரமராஜா வேண்டுகோள்
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை பொதுமக்களையும், பொருளாதாரத்தையும் எவ்விதத்திலும் பாதித்து விடக்கூடாது என்பதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பாக சென்னை மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டங்கள், விழிப்புணர்வு பிரசாரங்கள், துண்டு பிரசுர வினியோகங்கள் பெருமளவில் பேரமைப்பால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வணிகர்கள் செய்யாத தவறுக்கு வணிகர்களை குற்றம் சாட்டி, கடையடைப்புக்கு உத்தரவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எனவே வணிகர்கள் மட்டுமின்றி தொழிலாளர்களின் வாழ்வும் எவ்விதத்திலும் பாதித்துவிடாத வகையில் நியாயமான முடிவை எடுத்திட வேண்டும். எனவே கடைகள் அடைப்பு உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். கொரோனா 3-வது அலை தமிழகத்தில் நுழைந்திடாத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பேரமைப்பு உறுதி பூண்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com