நெல்லை-தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
நெல்லை-தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை
Published on

தென்காசி,

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 108.90 ஆக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 364 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 804 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 117.19 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி 75.65 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 46 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா அணையின் நீர்மட்டம் 71.6 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 70 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணையின் நீர்மட்டம் 66.57 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 30 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அதேபோல் கருப்பாநதியின் நீர்மட்டம் 61.84 உள்ளது. வினாடிக்கு 2 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 25 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. குண்டாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 36.10 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 5 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 58 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 106.25 அடியாக உள்ளது. வினாடிக்கு 3 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 60 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com