ஊத்துக்கோட்டை அருகே கணவன் தீ வைத்து எரித்த மனைவி சாவு

ஊத்துக்கோட்டை அருகே கணவன் தீ வைத்து எரித்த மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஊத்துக்கோட்டை அருகே கணவன் தீ வைத்து எரித்த மனைவி சாவு
Published on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பொன்மாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் பிரசன்னா (30). இவருக்கும் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கம்மவார்பாளையம் பஸ் ஸ்டாண்ட் தெருவை சேர்ந்த சுரேஷ் (35) என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

சுரேஷ் திருவள்ளூரில் வாகனங்களை சுத்தம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு சாய்கணேஷ் (11) என்ற மகன், குஷி (6) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக ஆத்திரமடைந்த சுரேஷ், மனைவி பிரசன்னா உடலின் மீது மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதில் 80 சதவீத தீ காயங்களுடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிரசன்னா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் சுரேஷை பென்னலூர்பேட்டை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com