

தகராறு
பெரிய காஞ்சீபுரம் மளிகை செட்டித்தெருவை சேர்ந்தவர் நவ்ஷத் (வயது 40). ஷேர் ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 2008-ம் ஆண்டு காஞ்சீபுரத்தை அடுத்த சித்தேரிமேடு பகுதியை சேர்ந்த ரசியா (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். நவ்ஷத் மது, கஞ்சா போன்றவற்றுக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் தகராறு செய்து வந்தார். மேலும் கடன் தொல்லையால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்த நிலையில் நவ்ஷத் மதுபோதையில் வீட்டுக்கு வந்து ரசியாவிடம் வழக்கம்போல் தகராறில் ஈடுபட்டார்.
வெட்டிக்கொலை
இதில் ஆத்திரம் அடைந்த நவ்ஷத் வீட்டில் இருந்த மரம் வெட்டும் கத்தியால், மனைவியை வெட்ட முயன்றார். சாமர்த்தியமாக தப்பிய நிலையில் ரசியா ஆத்திரம் அடைந்து அவரிடம் இருந்த கத்தியை பறித்து நவ்ஷத்தை சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் ரசியா, தான் கணவரை வெட்டிக்கொன்று விட்டதாக சிவகாஞ்சி போலீசில் சரண் அடைந்தார். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின்பேரில், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் மற்றும் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், போலீசாருடன் விரைந்து சென்று நவ்ஷத் உடலை கைப்பற்றி பிரேத
பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரசியாவை கைது செய்தனர்.