தோலம்பாளையம் அருகே காட்டு யானை அட்டகாசம்

தோலம்பாளையம் அருகே காட்டு யானை அட்டகாசம் செய்தது.
தோலம்பாளையம் அருகே காட்டு யானை அட்டகாசம்
Published on

காரமடை,

காரமடை அருகே தோலம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேல்பாவி, ஊக்கையனூர் கிராமங்களில் காட்டு யானை கடந்த ஒரு வாரமாக சுற்றி வருவதுடன் அருகில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தோலம்பாளையம் தெற்கு பகுதியை சேர்ந்த காரையன் என்பவர் தோட்டத்துக்குள் காட்டு யானை புகுந்தது. பின்னர் அந்த யானை அங்கு நின்ற மாமரங்களின் கிளைகளை உடைத்ததுடன், ஆழ்துளை கிணற்றில் உள்ள குழாய்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றது.

மேலும் அந்த யானை தொடர்ந்து அங்கு நடமாடி வருவதால், அதை கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என்றும், காட்டு யானை சேதப்படுத்தியதற்கு தகுந்த இழப்பீடும் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com