விட்டுகட்டியில் காட்சி பொருளான சுகாதார வளாகம் அதிகாரிகள் கவனிப்பார்களா?

விட்டுகட்டியில் சுகாதார வளாகம் காட்சி பொருளாக மாறி உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
விட்டுகட்டியில் காட்சி பொருளான சுகாதார வளாகம் அதிகாரிகள் கவனிப்பார்களா?
Published on

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள விட்டுகட்டி பகுதியில் அரசால் கட்டப்பட்ட சுகாதார வளாகம் உள்ளது. இதை வரம்பியம் விட்டுக்கட்டி, கீழத்தெரு, மேலத்தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அந்த சுகாதார வளாகம் தற்போது தண்ணீர் வசதி இன்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சுகாதார வளாகத்தை சுற்றி புதர்கள் மண்டி உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். தற்போது அந்த சுகாதார வளாகம் காட்சி பொருளாக மாறி விட்டதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வேதனை

இந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருபவர்களும் சுகாதார நிலையத்தை பயன்படுத்த முடியவில்லை என வேதனை தெரிவக்கின்றனர்.

இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உடனடியாக சுகாதார வளாகத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com