சூனாம்பேடு அருகே திருட்டுத்தனமாக மது விற்ற பெண்கள் உள்பட 8 பேர் கைது

சூனாம்பேடு அருகே திருட்டுத்தனமாக மது விற்ற பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூனாம்பேடு அருகே திருட்டுத்தனமாக மது விற்ற பெண்கள் உள்பட 8 பேர் கைது
Published on

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டுத்தனமாக வெளிமாநில மது விற்கப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் திலிப்குமார் மற்றும் போலீசார் சூனாம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சூனாம்பேடு காலனி பகுதியை சேர்ந்த மேனகா (வயது 30), மல்லீஸ்வரி (40), குட்டி(45), சுப்புலட்சுமி (40), வெண்ணிலா (42) , ஈசூரை சேர்ந்த முனியம்மாள் (42) , இல்லீடு பகுதியை சேர்ந்த புவனேஷ்வரி (35), சேகர் (65) ஆகியோர் 8 பேரும் வீட்டின் அருகே திருட்டுத்தனமாக வெளிமாநில மதுபாட்டில் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 8 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 400 வெளிமாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மது பாட்டில்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். கைது செய்யப்பட்ட 8 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com