கேரளாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் முக கவசம் அணியாமல் ரகளை செய்த என்ஜினீயர் போலீசார் ரூ.200 அபராதம்

கேரளாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் முக கவசம் அணியாமல் ரகளை செய்த சாப்ட்வேர் என்ஜினீயரை போலீசில் ஒப்படைத்தனர். அவருக்கு போலீசார் ரூ.200 அபராதம் வசூலித்து எச்சரித்து அனுப்பினர்.
கேரளாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் முக கவசம் அணியாமல் ரகளை செய்த என்ஜினீயர் போலீசார் ரூ.200 அபராதம்
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் வந்தது. 49 பயணிகள் அந்த விமானத்தில் பயணித்து கொண்டிருந்தனா. கண்ணூரை சோந்த பிரதீப்குமார் (வயது 46) என்ற சாப்ட்வேர் என்ஜினீயரும் அந்த விமானத்தில் பயணம் செய்தார்.

கொரோனா 2-வது அலை இந்தியா முழுவதும் மிகவேகமாக பரவுவதால் விமான பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. ஆனால் பயணி பிரதீப்குமா மட்டும் விமானத்துக்குள் முககவசம் அணியாமல் இருந்தார்.

இதைகண்ட விமான பணிப்பெண்கள், அவரை முககவசம் அணியும்படி கூறினா. ஆனால் அவா அணிய மறுத்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சகபயணிகள் கூறியதையும் அவா கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து விமானியிடம், விமான பணிப்பெண்கள் புகார் செய்தனா. அவர், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அந்த விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது.

உடனே விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்துக்குள் சென்று முக கவசம் அணியாமல் விமான பணிப்பெண்களிடம் ரகளை செய்த பயணி பிரதீப்குமாரிடம் விசாரித்தனா. ஆனால் அவா சரிவர பதில் கூறவில்லை.

இதையடுத்து பயணி பிரதீப்குமாரை விமானத்தை விட்டு கீழே இறக்கினா. பின்னர் சென்னை விமான நிலைய போலீசில் அவரை ஒப்படைத்தனா. அவா மீது விமானத்துக்குள் முககவசம் அணியாமல் பயணித்து கொரோனா பாதுகாப்பு விதிமுறையை மீறியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ரூ.200 அபராதம் விதித்தனர்.

அபராத தொகையை கட்டிய பிரதீப்குமாரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com