டிபன் கடையில் மதுபானம் விற்ற பெண் கைது

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே டிபன் கடையில் மதுபானம் விற்ற பெண் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டிபன் கடையில் மதுபானம் விற்ற பெண் கைது
Published on

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் மேகலா என்பவர் டிபன் கடையில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்வதாக காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் இசக்கிபாண்டியன் தலைமையிலான போலீசார், காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் உள்ள மேகலா டிபன் கடையில் நடத்திய சோதனையில் 20-க்கும் மது மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மேகலா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சதீஷ்குமார், பார்த்திபன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையறிந்த மேகலாவின் உறவினர்கள், போலீசார் மேகலாவை கைது செய்ததை கண்டித்தும், கைதான 3 பேரையும் விடுவிக்க கோரியும் பரமு என்ற பரமேஸ்வரி உள்பட சிலர் காசிமேடு பகுதியில் தங்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் உறவினர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com