கூடலூர் பகுதியில் விளைந்தமூங்கில் அரிசியை சேகரித்து வருவாய் ஈட்டும் பெண்கள்

கூடலூர் பகுதியில் விளைந்த மூங்கில் அரிசியை சேகரித்து வருவாய் ஈட்டும் பணியில் பெண்கள் ஈடுபட்டு உள்ளனர்.
மூங்கில் அரிசி சேகரிக்கும் பெண்கள்
மூங்கில் அரிசி சேகரிக்கும் பெண்கள்
Published on

கூடலூர்,

கூடலூர் வனக்கோட்டத்தில் ஓவேலி, கூடலூர், தேவாலா, சேரம்பாடி, பிதர்காடு உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதுதவிர சந்தனம், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களும் இருக்கிறது.

இதேபோல் காட்டு யானைகளுக்கு மிகவும் பிடித்தமான மூங்கில்கள் பல நூறு ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ளது. பல ஆண்டுகள் வளர்ந்த மூங்கில் கள் மூப்பின் காரணமாக பூத்து அரிசியாக மாறும். தற்போது கூடலூர் பகுதியில் விளைந்த மூங்கில் அரிசி உதிர்ந்து வனப்பகுதியில் விழுந்து வருகிறது. அந்த அரிசியில் மருத்துவ குணம் அதிகமாக இருப்பதால் அதை சேகரிக்கும் பணியில் ஆதிவாசி பெண்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் அவர்களுக்குள் போட்டியும் ஏற்பட்டு வருகிறது.

வனப்பகுதியில் சிதறி கிடக்கும் மூங்கில் அரிசியை காலை முதல் மாலை வரை குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு சேகரித்த அரிசிகளை தரம் பிரி மூட்டைகளில் கட்டி தங்களது வாகனங்களில் வீடுகளுக்கு கொண்டு சென்று விற்று வருவாய் ஈட்டி வருகிறார்கள்.

இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, மூங்கில் அரிசியை சேகரித்து, உமியை அகற்றி அந்த அரிசி கிலோ ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அரிசி மருத்துவ குணம் நிறைந்தது என்பதால் அதை வாங்குவதில் போட்டி அதிகளவில் உள்ளது என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com