பா.ஜ.க.ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா வேதனை

பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா வேதனையோடு கூறினார்.
பா.ஜ.க.ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா வேதனை
Published on

புதுச்சேரி,

புதுவை மாநில மகளிர் காங்கிரஸ் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி சமபந்தி விருந்து நிகழ்ச்சி அபிஷேகப்பாக்கத்தில் நடைபெற்றது. இதையொட்டி அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சரும், காங்கிரஸ் மாநில தலைவருமான நமச்சிவாயம், அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பக்கிரியம்மாள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் சமபந்தி விருந்து நடைபெற்றது. தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வைஜெயந்தி வரவேற்றார்.

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது;-

பெண்களின் முன்னேற்றத்திற்காக அம்பேத்கர் பல நல்ல விஷயங்களை செய்துள்ளார். பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. கஷ்டங்களைதான் அனுபவிக்கின்றனர். காஷ்மீர் சிறுமி மீதான பாலியல் வன்கொடுமையை அறிந்து எனது மனம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com