

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வருவதை கண்டிக்கும் விதமாக, இளம் பெண்கள் வித்தியாசமான ஆன்லைன் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். பசுவின் முகம் போன்று, மாஸ்க் அணிந்துகொண்டு போட்டோ எடுப்பதுடன் அதை சமூக வலைத்தளங் களில் பதிவேற்றி பாதுகாப்பு கோருகிறார்கள். பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பும், மரியாதையும் பெண்களுக்கு இருப்பதில்லை என்பதே இவர்களின் ஆதங்கம். பிரபல புகைப்பட கலைஞர் சுஜத்ரா கோஷ் ஆரம்பித்த இந்த போட்டோ புரட்சி, சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல வேகமாக பரவி வருகிறது.