

கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை பாய்கார தெருவை சேர்ந்தவர் முத்துகுமார். இவர் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், திருமயம் கோனாபட்டையை சேர்ந்த அழகர்சாமியும், அவரது மனைவி அருணாவும் தன்னை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்தை பெற்றுக்கொண்டனர். ஆனால் பணம் வாங்கி 6 மாதங்கள் ஆகியும் இதுவரை என்னை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கவில்லை. மேலும் எனது பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் மனு குறித்து கந்தர்வகோட்டை போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து கந்தர்வகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.