

மத்திகிரி:
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் விஜயகுமார் ராம் (வயது 47). இவர் ஓசூர் மத்திகிரி அருகே உளவீரனப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. கடந்த 19-ந் தேதி இவர் மது போதையில் அறையில் தவறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் ராம் இறந்தார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.