மின்சார சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடசென்னை அனல்மின் நிலையம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மின்சார சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடசென்னை அனல்மின் நிலையம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்சார சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடசென்னை அனல்மின் நிலையம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

மீஞ்சூர்,

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலைய நுழைவாயில் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்துறையை பொதுத்துறையாக மாற்றி பாதுகாக்க வேண்டும், மின்சார சட்ட திருத்தம் 2021 மசோதாவை கைவிட வேண்டும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இதில் மின்வாரிய பொறியாளர் கழக பொதுச்செயலாளர் ஜெயந்தி, மின்வாரிய பொறியாளர் சங்கம் சம்பத்குமார், மின்சார பிரிவு அண்ணா தொழில் சங்கம் பூபாலன், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் கண்ணபிரான், ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் தாமோதரன், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ராமமூர்த்தி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகி சுந்தரம் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com