அன்பினாலே உண்டாகும் உலக அமைதி

சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி, எரிமலைகளால் சூழப்பட்ட நெருப்புக் கோளமாக இருந்தது. இதிலிருந்து வெளியான நீராவியும், வாயுக்களும் தான் வளிமண்டலத்தில் நிறைந்திருந்தன.
அன்பினாலே உண்டாகும் உலக அமைதி
Published on

பூமி குளிர்ந்தபோது வளிமண்டல நீராவியும் குளிர்விக்கப்பட்டு மழையாகப் பொழிந்தது. இம்மழை நீரால் உலகு தழைத்தது. படிப்படியான பரிணாம வளர்ச்சியில் பல்லினப் பெருக்கம் நிகழ்ந்தது.

அறிவின் அடிப்படையில் மனிதன் உயிர்களில் தலைமையிடத்தைப் பற்றினான். கூட்டு வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, இனக்குழு வாழ்க்கை என விரிந்து, உலகிலுள்ள உயிர்கள் அனைத்தையும் வாழ வைப்பது அன்பு. தாயன்புக்கு நிகர் உலகில் எதுவும் இல்லை.

தன்னலமற்ற தாயன்பினால் உலகம் தழைக்கிறது. சேயின் நல்வாழ்வுக்காகத் தன்னையே தியாகம் செய்து வாழும் அன்னையின் அரவணைப்பில் உலகத்து உயிர்கள் வாழ்கின்றன. அன்னை மட்டுமல்ல. இவ்வுலகில் வாழும் பெண்களே அன்பு வடிவம் தான்மக்கள் இனம் மட்டுமன்று, மற்ற இனங்களும் அன்பினால் பிணைந்தே வாழ்கின்றன.

மேயச் சென்ற பசு, கன்றை நினைத்துக் கதறிய வண்ணம் மாலையில் மீளுகின்றது. கூட்டில் உள்ள குஞ்சுகளுக்குத் தாய்ப் பறவைகள் இரையை வாயில் கவ்விச் சென்று ஊட்டுகின்றன. மடியில் குட்டியைச் சுமந்த வண்ணம் குரங்குகள் மரத்திற்கு மரம் தாவுகின்றன. இயற்கையாகவே எல்லா உயிரினங்களும் ஏதோ ஒரு வகை அன்பினால் பிணைக்கப்பட்டே வாழ்கின்றன.

மனித குலத்திற்கு அன்பும் அமைதியுமே அளவில்லா இன்பத்தை அளிக்கிறது. அணுகுண்டை கண்டுபிடித்தவர்கள் கூட அன்பையும் அமைதியையுமே உலகிற்கு வலியுறுத்தி போயினர். உலகில் சாதி, மத, இன, மொழி பேதங்களால் அடிக்கடி அமைதியில் தொய்வு ஏற்படுகிறது. வர வர மனிதர்களிடம் சகிப்பு தன்மை குறைந்து வருகிறது.

இன்றைய உலகில் முதலாளித்துவம், பொதுவுடைமை என்னும் இரு பொருளாதார கொள்கைக்காக மோதல்களும், முரண்பாடுகளும் தலை தூக்கி வருகின்றன. உலகில் உள்ள நாடுகள் பிற நாட்டு எல்லைகள், உரிமைகள் ஆகியவற்றை மதிக்க வேண்டும். அமைதியான நட்புறவுடன் வாழ வேண்டும். ஆக்கிரமிப்பு கூடாது. ஆகியவையே இந்த உலகில் அமைதி ஏற்பட காரணிகளாகும்.உலகில் உள்ள மக்கள் அனைவரும் அன்பையும் அமைதியையும் போற்றினால் அன்பினாலே உண்டாகும் உலக அமைதி.

கல்வியாளர் மகா.பாலசுப்பிரமணியன்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com