உலக சேலை தினம்: 75 விதமான சேலைகள் அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்த பெண்கள்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய கல்யாண்மாயி பெண்கள் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில், உலக சேலை தின விழா, விமான நிலைய ஆணையக மண்டபத்தில் நடைபெற்றது.
உலக சேலை தினம்: 75 விதமான சேலைகள் அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்த பெண்கள்
Published on

இதில் விமான நிலையத்தில் பணியாற்றும் பல்வேறு துறைகள், விமான நிறுவனங்களை சேர்ந்த பெண்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் ஊழியர்களின் குடும்பங்களை சேர்ந்த 8 வயது சிறுமி முதல் 60 வயது வரையிலான பெண்கள் உள்பட 75 பேர் விதவிதமான சேலைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் கட்டப்படும் 75 விதமான சேலைகள் அணிந்து கலக்கலாக அணி வகுத்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். நிகழ்ச்சியில் சேலை அணிந்து வந்த பெண்களுக்கு விமான நிலைய இயக்குனர் சரத்குமார், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பொது மேலாளர் பீனா காந்தி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com