கும்பகோணத்தில் 8-ந் தேதி மாசிமக ஆரத்தி விழா காசியில் இருந்து ஆராதனை பொருட்கள் கொண்டு வரப்பட்டன

கும்பகோணத்தில் 8-ந் தேதி மாசிமக ஆரத்தி விழா நடைபெற்றது. இதற்காக காசியில் இருந்து ஆராதனை பொருட்கள் கும்பகோணத்துக்கு கொண்டு வரப்பட்டன.
கும்பகோணத்தில் 8-ந் தேதி மாசிமக ஆரத்தி விழா காசியில் இருந்து ஆராதனை பொருட்கள் கொண்டு வரப்பட்டன
Published on

கும்பகோணம்,

கும்பகோணத்தில் 8-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாசிமகத்தன்று அகில பாரதீய சன்னியாசி சங்கம் மற்றும் தென்பாரத கும்பமேளா மகாமகம் அறக்கட்டளை சார்பில் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் காசிராமன் தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு சிவவாத்தியங்கள், மங்கள வாத்தியம் முழங்க மகாமக குளத்தை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு ஆதீனங்கள், மடாதிபதிகள், துறவியர்கள் சார்பில் கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமக ஆரத்தி விழா நடக்கிறது.

ஆராதனை பொருட்கள்

கங்கையில் நடைபெறும் தீபஆரத்தி போல கும்பகோணம் மகாமக குளத்திலும் தீபஆரத்தி நடத்த ஆராதனை பொருட்கள் காசியில் இருந்து கும்பகோணத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. யோகிசிவபிரம்மானந்த சரஸ்வதி சுவாமிகள் நேற்று இந்த பொருட்களை தென்பாரத கும்ப மேளா மகாமக அறக்கட்டளை குழுவினரிடம் ஒப்படைத்தார்.

நிகழ்ச்சியில் அகில பாரதீய சன்னியாசிகள் சங்க துணைத்தலைவர் மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் சுவாமிகள், ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதானந்தஆனந்தா, தஞ்சை மண்டல பிரதிநிதி கோரக்கர் சுவாமிகள் மற்றும் தென்பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை தலைவர் பி.கல்யாணசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com