புதிய படகுகள் கட்ட 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர்

தூண்டில் மூலம் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள் வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகினை கட்ட, படகு ஒன்றுக்கு ஆகும் செலவினத்தில் 50 சதவீதம் வரை மீன்வர்களுக்கு மானியமாக வழங்கப்படும் என்று சென்னை கலெக்டர் கூறியுள்ளார்.
புதிய படகுகள் கட்ட 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர்
Published on

தூண்டில் மூலம் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள் வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகினை கட்ட, படகு ஒன்றுக்கு ஆகும் செலவினத்தில் 50 சதவீதம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மீன்வர்களுக்கு மானியமாக வழங்கப்படும். தமிழகத்தை சேர்ந்த முழுநேர மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அதிகபட்சம் 6 பேர் கொண்ட குழுவாகவோ அல்லது மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனி நபராகவோ இந்த திட்டத்தில் பயன் பெறலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.fisheries.tn.gov.inஎன்ற இணையதளத்தில் இருந்து படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம். சென்னை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர், மீன்பிடி துறைமுக மேலாண்மை பிரிவு அலுவலகத்திலும் நேரில் விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கமிஷனர், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஒருங்கிணைந்த கட்டிடங்கள், 3-வது தளம், கால்நடை மருத்துவமனை வளாகம், அண்ணா சாலை, நந்தனம், சென்னை-35 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந்தேதிக்குள் அனுப்பவேண்டும். விண்ணப்பத்துடன் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சூரை மீன்பிடி படகின் வரைபடம் தகுதிவாய்ந்த கப்பல், மீன்பிடிகலன் கட்டுமான வரைவாளரிடமிருந்து பெற்று அசல் கண்டிப்பாக இணைக்கப்படவேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு மாநில அளவிலான பதிவு எண்ணுடன் கூடிய ஒப்புகை சீட்டு விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.

சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com