கணினி பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கழகம் சார்பில் நடைபெறும் கணினி பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கணினி பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
Published on

புதுச்சேரி,

புதுவை அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குனர் கதிர்வேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் இயங்கி வரும் கணினி பயிற்சி மையங்களில் பல்வேறு தொழில் சார்ந்த கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது. 6 மாதத்திற்கு நடத்தப்படும் இந்த பயிற்சி மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுதுறையின் தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனத்தின் அங்கீ கரிக்கப்பட்ட பாடத்திட்டத்தினை கொண்டது.

இந்த கணினி பயிற்சி வருகிற 27-ந் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்காக தகுதி வாய்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கதிர்காமம், எல்லைப்பிள்ளைச்சாவடி, வில்லியனூர், கிருமாம்பாக்கம் மற்றும் அண்ணாநகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வருகிற 26-ந் தேதி காலை 10 மணியளவில் நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்த பயிற்சிக்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர் களும், விண்ணப்பிக்க தவறிய மாணவ-மாணவிகளும், இளைஞர்களும், இல்லத்தரசிகளும் தங்கள் கல்வி சான்றிதழுடன் தகுதியுள்ள பயனாளிகள் இந்த நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com