பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 துணைத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருள்மொழிதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ள பிளஸ்-2 துணைத் தேர்விற்கு தகுதியான தனித் தேர்வர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கடந்த பிளஸ்-2 தேர்வு எழுதியோர், தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

அதேபோல 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டு இடைவெளியும் 1.10.17 அன்று 16 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நேரடித் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம்.

தனித்தேர்வர்கள்(ஆண்கள்) பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பெண்கள் பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், இன்று (வியாழக்கிழமை) முதல் 31-ந்தேதி வரை(25 மற்றும் 27-ந் தேதி தவிர்த்து) மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.

மறுமுறை தேர்வு எழுதுவோர் ஒவ்வொரு பாடத்திற்கும், ரூ.50 வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதர கட்டணமாக ரூ.35-ம், ஆன்-லைன் பதிவுக்கட்டணமாக ரூ.50-ம் செலுத்த வேண்டும். நேரடித் தனித்தேர்வர்கள் மொத்தம் ரூ.187-ம், ஆன்-லைன் பதிவுக்கட்டணமாக ரூ.50-ம் செலுத்த வேண்டும்.

தேர்வுக்கட்டணம் மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணங்களை பணமாக செலுத்த வேண்டும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com