வருகிற 1-ந்தேதி முதல் வாகனங்களுக்கான வரியை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் - வட்டார போக்குவரத்து அதிகாரி தகவல்

வாகனங்களுக்கான வரியை வருகிற 1-ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என வட்டார போக்குவரத்து அதிகாரி செந்தில்குமார் கூறினார்.
வருகிற 1-ந்தேதி முதல் வாகனங்களுக்கான வரியை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் - வட்டார போக்குவரத்து அதிகாரி தகவல்
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பஸ், மினி பஸ், லாரி, வாடகை கார், வேன் உரிமையாளர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி செந்தில்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

அனைத்து வாகனங்களுக்கும் ஒவ்வொரு காலாண்டிற்கும் வாகன வரியை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வங்கி வரைவோலை மூலம் செலுத்தும் நடைமுறை இருந்து வந்தது. இந்த நடைமுறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்திற்கான வரியை ஆன்லைன் மூலம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிக்காக தொடர்பான வாகனங்களின் பதிவு சான்று, அனுமதி சீட்டு, காப்புச்சான்று போன்ற விவரங்களின் நகல்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பித்து வாகனங்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே ஆன்லைன் மூலம் வரி செலுத்த முடியும். எனவே வாகனங்களின் பதிவுச்சான்று, அனுமதி சீட்டு நகல்களை உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சமர்ப்பித்து பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் வாகன ஆய்வாளர் கருப்பண்ணன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com