வரத்துவாரி அடைபட்டதால் மழை பெய்தும் நிரம்பாத தாமரை கண்மாய்

வரத்துவாரி அடைபட்டதால் மழை பெய்தும் தாமரை கண்மாய் நிரம்பாமல் உள்ளது.
வரத்துவாரி அடைபட்டதால் மழை பெய்தும் நிரம்பாத தாமரை கண்மாய்
Published on

திருமயம்,

புதுக்கோட்டை சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தாமரை கண்மாய் உள்ளது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த கண்மாய் மூலம் சுற்றுவட்டார விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இந்த கண்மாய் நிரம்பாமல் உள்ளது.

இதனால் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் விவசாயத்தை மறந்து வேறு தொழிலுக்கு தாவி வருகின்றனர். மேலும் இந்த கண்மாய் நிரம்பாததற்கு காரணம் வரத்துவாரிகள் அனைத்தும் அடைப்பட்டு உள்ளது. பலத்த மழை பெய்தாலும் தண்ணீர் வரத்து இன்றி இக்கண்மாய் வறண்டே காணப்படுகிறது.

கோரிக்கை

இந்த ஆண்டு பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்த கண்மாய் வரத்து வாரியை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும் கண்மாயில் வளர்ந்துள்ள முள்செடிகள், காட்டாமணக்கு செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com